விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ-மாணவிகளுக்கான 51 விடுதிகளை சோதனை செய்து மேலும் உள் கட்டமைப்பு வசதி செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 51 பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விடுதிகளை ஆய்வு செய்துள்ளார் மாவட்ட கலெக்டர்.
விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்படுகின்றதா என்பதை பார்வையிட்டுள்ளார் கலெக்டர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கின்றதா என ருஷி பார்த்து ஆய்வு செய்தார். தமிழக அரசின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஐம்பத்தொரு ஆதிதிராவிடர் நல மாணவ மாணவிகளுக்கான விடுதிகளை சோதனை செய்து விரிவுபடுத்துவதற்கான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் தேவையான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். விடுதிகளில் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் எழுதி பொறுப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.