Categories
உலக செய்திகள்

இலங்கையில் 41 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்த அதிபர்…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!!

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225-ஆக இருக்கிறது. இவற்றில் ஆளும்  இலங்கை பொதுஜன பெருமுனை முன்னணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 145 ஆகும். இதில் ஆளும்கட்சியை சேர்ந்த 41 உறுப்பினர்கள் தனித்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் தனித்து செயல்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் கோட்டாபயராஜபக்ச அழைப்பு விடுத்து இருக்கிறார்.

இடைக்கால அரசு அமைப்பதற்கு 41 பேரும் கோரிய சூழ்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். அதிபரிடம் பேச்சுவார்த்தைக்கு பின் 41 உறுப்பினர்களும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நாட்டில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் சூழ்நிலையில், பதவியை தக்க வைக்க கோட்டாபயராஜபக்ச முயற்சி செய்வதாக கூறப்பட்டு வருகிறது.

Categories

Tech |