தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு -வட இலங்கை கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.