தமிழக முதல்வர் மலையாளத்தில் பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடானது ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழைப்பினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீத்தாராம் யெச்சூரி அவரை வரவேற்றுள்ளார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றி உள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் தொடர்ந்து வரும் உறவாகும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார். மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக ‘என் பெயர் ஸ்டாலின்’ என்பதை மலையாளத்தில் பேசியதை கேட்ட, அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.