மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே 1 ராக்கெட் அமைப்பானது வெற்றிகரமாக கடந்த சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இணைந்து ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) போன்றவை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டது. சென்ற 14 நாட்களில் பல தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. அனைத்து ஏவுதலிலும் தேவையுள்ள துல்லிய தொலைவு இலக்கு எட்டப்பட்டது.
இந்த சோதனையுடன் இபிஆா்எஸ் ராக்கெட்டுகளை தொழில்முறையில் தயாரிக்கத் தேவையான நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத்தயாரிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. புனேயிலுள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புனேயைச் சோ்ந்த டிஆா்டிஓவின் உயா்நிலை ஆராய்ச்சி சோதனைக் கூடத்தின் ஒத்துழைப்புடன் பினாகா ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இது சென்ற 10 வருடங்களாக இந்திய ராணுவ சேவையில் சோ்க்கப்பட்டுள்ளது. இப்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கும் தூர இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலரும், டிஆா்டிஓ தலைவருமான டாக்டா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தாா்.