அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கொடிக்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆ வகுப்பு படித்து வந்துள்ளார் இந்நிலையில் சிவராமபேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பரமசிவம் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாமி கும்பிட்டுவிட்டு பரமசிவம் ஊருக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.