Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த கணேசன், மணிகண்டன், வீரபுத்திரன் மற்றும் பாபு என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |