பிரபல நடிகர் நடித்துள்ள திரைப்படத்தை சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதாவது ஆங்கிலேயர்கள் உருவாக்கி விட்டு சென்ற பழமையான அமைப்பு முறையே காவல்துறை எனும் அரசு கருவி. இந்த திரைப்படத்தில் அரசுகளின் கருவியாக செயல்பட்டுவரும் காவல்துறையில் புரையோடி இருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை சிறப்பான முறையில் இயக்குனர் தமிழ் டாணாக்காரன் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
'டாணாக்காரன்' – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம்!https://t.co/sVXHqzvtYe@iamVikramPrabhu | @directortamil77 | @philoedit | @GhibranOfficial | @madheshmanickam | @prabhu_sr | @rthanga | @LalDirector | @ianjalinair | @Potential_st | #Taanakkaran pic.twitter.com/KWVvRpov8N
— சீமான் (@SeemanOfficial) April 9, 2022
இதனையடுத்து தனித்துவமான கதையை உருவாக்கி சிறப்பான கதை அம்சம் கொண்டதாக டாணாக்காரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் இயக்குனர் தமிழ் தேர்ந்தெடுத்த கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக அமைந்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அறிவு கதாபாத்திரத்தில் முழுமையான மற்றும் உணர்வு பூர்வமான நடிப்பாற்றலை விக்ரம் பிரபு வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.