தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை 5 ஊழியர்களுக்கு சென்னை மென்பொருள் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘கிஸ்ஃப்ளோ’ என்ற பிரபல மென்பொருள் நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இவ்விழாவானது சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன் மற்றும் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் கௌதம் கிருஷ்ணசாமி மேலும் பொறியியல் பிரிவு இயக்குனர்கள் விவேக், மதுரை ஆதி ராமநாதன் மற்றும் துணைத் தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகிய 5 பேருக்கும்,5 பி.எம்.டபிள்யூ கார்களை, அந்நிறுவனர் சுரேஷ் சம்மந்தம் பரிசாக அளித்துள்ளார்.
ஏனென்றால் நிறுவனம் தொடங்கியது முதலே, இவர்கள் என்னோடு இருக்கிறார்கள் என்றும் என்னுடைய எல்லா கடின காலத்திலும் என்னோடு சேர்ந்து, இந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திட உழைத்தார்கள் என்று அந்நிறுவனர் கூறியுள்ளார். மேலும் அவர்களது உழைப்புக்கான மிகச்சிறிய அங்கீகாரம் தான் இது, என்று இந்த பரிசினை அளித்துள்ளார் .
மேலும் இவ்விழாவில் ஊழியர்களுக்கு தெரியாமலேயே, இந்த பரிசினை சர்ப்ரைசாக அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதையடுத்து காரினை பரிசாக பெற்ற ஊழியர்கள் கூறியதாவது, எங்களால் இதனை நம்ப முடியவில்லை எனவும் கனவு நனவான நேரம் என்று தெரிவித்துள்ளனர்.