Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானை தாக்கி விவசாயி பலி”… உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு உணவு சாப்பிட வந்த யானை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கனபள்ளி, நேர்லகிரி மகாராஜகடை உள்ளிட்ட வனப்பகுதியில் 12க்கும்  மேற்பட்ட காட்டு யானைகள் இருக்கின்ற நிலையில் இவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கொங்கனபள்ளி ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தது.

அப்போது விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வந்துள்ளார். அவர் யானை இருப்பதை கவனிக்காமல் அதன் அருகே வந்தபோது அவரை விரட்ட ஆரம்பித்துள்ளது. அவர் அங்கிருந்து தப்பி ஓட விடாமல் விரட்டிய யானை அவரின் தலையை நசுக்கியது. இதனால் விவசாயி திம்மப்பா நாயுடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பிறகு யானை காட்டுக்குள் சென்றது. இந்த நிலையில் அந்தப் பக்கம் வந்த நபர்கள் இறந்து கிடந்த விவசாயியை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பொதுமக்கள் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதற்கு ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் விவசாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வனக்காப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நிவாரணம் வழங்காமல் அவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து முதல்கட்ட நிவாரணமாக திம்மப்பா நாயுடு குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |