Categories
உலகசெய்திகள்

நோட்டா அமைப்பில்… விரைவில் இணையும் இரு நாடுகள்…. எது தெரியுமா….?

நோட்டா அமைப்பில்  பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோட்டா அமைப்பை வலுவடைய  செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் காரணமாக அவர் நினைத்ததற்கு மாறாக நோட்டா அமைப்பு வலுவடைந்து உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே 30 நாடுகளை கொண்ட நோட்டா  அமைப்பில் தற்போது பின்லாந்து மற்றும் ஸ்வீடன்  சேர்வதன்  மூலமாக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் விளைவாகவே நோட்டா அமைப்பில் சேர்வது  குறித்து பரிசீலனை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக பின்லாந்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |