பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் முன்மொழியப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாளை நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது.
அந்நாட்டின் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவராக இருக்கும் ஷபாஸ் ஷெரிப், புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக ஷபாஸ் ஷெரிப் பிரதமர் வேட்பாளராக இன்று முன்மொழியப்பட்டிருக்கிறார். இவர் மூன்று தடவை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.