Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் நான்கு வழிச்சாலை…. அமைச்சர் எ.வா.வேலு சொன்ன முக்கிய தகவல்….!!!!

மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வா.வேலு மணப்பாறையில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையை ஒட்டிய 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரயில்வே மலையின் மீது மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்க்கு நிலங்கள் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட  சிக்கல்களால் தாமதம் ஆவதோடு திட்டச் செலவும் உயர்வது உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதலில் பல சிக்கல் ஏற்படுவதால் அவை தீர்ந்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |