Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது”…. டுவிட் செய்த காயத்ரி ரகுராம்….!!!!

நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டின் ஆட்சி மொழியை அலுவல் மொழி என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் #stopHindilmposition என்பதே டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.  இந்நிலையில் பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் அதில் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தனித்துவம் உள்ளது. தங்கள் மொழிகளை மக்கள் நேசிக்கிறார்கள். இதனால்தான் நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் பிற மொழி மக்களுடன் பேச இந்தி இணைப்பு மொழி என்று குறிப்பிட்ட அவர் தமிழை தேசிய மொழியாக திராவிட கட்சிகள் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |