மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தில் ராம்பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்பிரபு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மீண்டும் அப்பகுதியில் அந்த வாலிபர்கள் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.