Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தற்காலிக பணி நீக்கம்…. திடீர் ஆய்வு…. இணைப்பதிவாளர் உத்தரவு….!!

ரேஷன் கடை விற்பனையாளரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் ஏ.மரூர் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரேஷன் கடை விற்பனையாளர் செல்வகுமார் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் ரேஷன் கடை விற்பனையாளர் செல்வகுமாரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |