வளரும் தமிழகம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை அம்பேத்கர் சிலை அருகே வைத்து வளரும் தமிழகம் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பிரிக்கமுடியாத வனப்பகுதியாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில பொதுச்செயலாளர் சீமான் சேகர், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.