Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் இரும்பு கம்பம் விழுந்து வாலிபருக்கு ஏற்பட்ட காயம்… பொதுமக்கள் கோரிக்கை…!!!

இரும்பு கம்பம் விழுந்து இளைஞர் காயம் அடைந்ததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் தனியார் செல்போன் நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்காக  இரும்பு கம்பம் மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் மட்டும் நடபடாமல் குடியிருப்பு பகுதி குடியிருப்பு பகுதிகளிலும் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கனத்த மழை பெய்ததால் உறையூர்பாளையம் பஜாரில் இருக்கும் செவ்வந்திபிள்ளையார் கோவில் தெருவில் நடப்பட்டிருந்த இரும்பு கம்பம் சரிந்து விழுந்து அந்த தெருவை சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் காயமடைந்துள்ளார்.

இவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்கள். திருச்சி மாநகரில் இதுபோன்ற இரும்பு கம்பங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ள நிலையில் அது சரியாக நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆதலால் அந்த கம்பங்கள் முறையாக நடப்பட்டு இருக்கின்றதா? என அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

Categories

Tech |