Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நீதி மையம் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இவருக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் டீசல், கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி, அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றம், சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி உள்ளனர். இதில் இளைஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முடிவில் நகர அமைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |