பிரான்சில் 11-வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். பகல் 8 -மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும். எனினும் மக்கள் நெருக்கடி அதிகம்கொண்ட Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice போன்ற பகுதிகளில் இரவு 8 மணிவரை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும்.
தலைநகர் பரிசில் நேற்று நண்பகல் வரை 15.34 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சென்ற 2017ஆம் வருடம் ஜனாதிபதி தேர்தலின்போது நண்பகல் வரை 24.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தன் சொந்த ஊரான Le Touquet பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவருடைய மனைவி பிரிஜித் மேக்ரானும் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளரான Eric Zemmour பாரிஸ் 8ஆம் வட்டாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் தமது ஆவணங்களை சமர்ப்பித்து தன் வாக்கினை பதிவு செய்துள்ளார். இதேபோன்று தலைநகர் பாரிசில் மொத்தமாக 899 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1,355,541 நபர்கள் வாக்களிக்கத் ஏற்புடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் பாரிசில் இரவு 8 மணி வரை வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை 7 மணியுடன் முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவடையும். இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.