ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் அருணாச்சலம் திரைப்படமானது 1997ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினி அப்பாவாக வேதாச்சலம் கதாபாத்திரத்திலும் மகனாக அருணாசல கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
ரஜினி எப்படி இருக்க வேண்டும் என ரசிகர்கள் நிஜத்தில் எதிர்பார்க்கிறார்களோ அதை ரஜினி அத்திரைப்படத்தில் செய்திருப்பார். ரசிகர்கள் அருணாச்சலம் திரைப்படம் போல மீண்டும் ஒரு திரைப்படத்தை பண்ண வேண்டும் என விரும்புகின்றார்கள். அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினி காமெடி, ரொமான்ஸ் என மிகவும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ரஜினியும் இயக்குனர் சுந்தர்.சியும் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.