Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐஐடி மாணவி பலாத்கார வழக்கு…. குற்றவாளிக்கு ஜாமின்…. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போலீஸார்….!!

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள ஐ.ஐ.டி  கல்லுரியில்  மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி  விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஆண்டு மார்ச் மாதம்  சென்னைலுள்ள  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் திடிக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியதாவது, ஐ.ஐ.டியில் படித்து வந்த போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி 2 பேராசிரியர் உட்பட   8 நபர்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால்  கோட்டூர்[புரம் போலீசார் 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில்  போலீசார் ரகசியமாக வாக்குமூலம் சேகரித்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 2பேராசிரியர் உள்ளிட்ட  8 நபர்கள் மீது வழக்கு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றவாளிகளில்  2 பேர்  வெளிநாடு சென்றுவிட்டதால்  மீதம் இருக்கும் 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த 8 நபர்களில்  முதல் குற்றவாளி  மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிங்சூப்தேப் சர்மா என்பது விசாரணையில் தெரிந்தது.

இந்த குற்றவாளியை பிடிப்பதற்கு போலீசார் தனி காவல் படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.  அதன் பின் அவரை  போலீசார் மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை  மேற்கு வங்க மாநிலத்திலுள்ள  டைமண்ட் ஹார்பர் மாவட்ட கோர்ட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில்  குற்றவாளியான கிங்சூப்தேப் சர்மாவை சென்னைக்கு அழைத்து  வருவதற்கு கோட்டூர் புரம் போலீசார்  கோரிக்கை விடுத்தனர். அதை நிராகரித்த டைமண்ட் ஹார்பர் மாவட்ட கோர்ட் குற்றவாளியை ஜாமீனில் விடுவித்து தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து குற்றவாளியின்  ஜாமீனை ரத்து செய்யகோரி சென்னை ஐகோர்ட்டில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதால் முக்கிய ஆதாரங்களை சேகரிப்பதற்காக இந்த வழக்கிற்க்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கான விவரங்களையும் காவல்துறையினர் ஐ.ஐ.டி மருத்துவரிடம் சேகரிக்க தொடங்கியுள்ளனர் .

Categories

Tech |