Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தந்தை- மகன்களை கைது செய்த போலீஸ்…!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதுதொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளம்பெண் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் ஆனையூரில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் 10 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகிறேன். நான் வீட்டில் தனியாக இருக்கும்போது மணிகண்டனின் தந்தை பாலசுப்பிரமணியன், சகோதரர் சரவணன் ஆகியோர் எனக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். மேலும் மணிகண்டன் என்னை துன்புறுத்தி மிரட்டல் விடுக்கிறார்.

எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |