மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி எஸ்பி காலனியில் பெயிண்டரான சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சஞ்சய் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
மேலும் கோபத்தில் சஞ்சய் தனது மனைவியை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அர்ச்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சஞ்சயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.