சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்ஜி நகர் காலனியில் வசிக்கும் சுபத்திரா மற்றும் கருணாமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.