திடீரென காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 16-ஆம் தேதி மீனா என்ற பெண்ணை சுரேஷ் திருமணம் செய்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பெங்களூர் செல்வதற்காக சுரேஷ் தனது மனைவியுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிய மீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சுரேஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் சுரேஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.