Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள டி வி.எஸ் டோல்கேட் இக்பால் காலனியில் ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நவல்பட்டியில் இருக்கும் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆதிலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதிலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆதிலட்சுமி இரு வங்கிகளில் கடன் பெற்று இருந்ததாலும், சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. எனவே ஆதிலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |