மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மனச்சனம்பட்டி காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குப்புரெட்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மலை- வளையப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் சிதம்பரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிதம்பரம், ஜீவா மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.