மின்னல் தாக்கியதால் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடாமங்கலம், மணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் உப்பிடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் இருக்கும் தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னைமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.