Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கியில் சேமித்து வைத்த பணம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பள பணத்தை சிறிது சிறிதாக ஒரு தனியார் வங்கியில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வீடு திரும்பிய ராமசாமி வங்கியில் சேமித்த பணத்தை சரி பார்த்தபோது அதில் இருந்த 7 1/4 லட்ச ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் வங்கி கணக்கிலிருந்து கடந்த வருடம் 16-110-2021 முதல் 19-11-2021 வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைன் மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது கோவையில் சைபர் குற்றம் மற்றும் குறிப்பாக ஆன்லைன் மூலம் பண திருட்டு அதிகரித்து கொண்டே செல்லும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |