ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது மாறுபடுகிறது. இவ்வாறு சமீபத்தில் ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏவை 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை மார்ச் 30 அன்று ஒப்புதல் அளித்தது.
அந்த வகையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி, DA 3% உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னதாக பெற்ற அடிப்படை ஊதியமானது 31% லிருந்து 34% ஆக உயர்த்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிஏ குறித்த முடிவு எடுக்கப்பட்டு, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி கூடுதல் தவணை அகவிலைப்படியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில், டிஏ மற்றும் டிஆர் இரண்டின் காரணமாக கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி செலவாகும்.
ஆனால் இந்த முடிவின் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் முடிவின்படி கொடுப்பனவுகளை வழங்குமாறு இந்திய ரயில்வே தனது மண்டல அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, ரயில்வே ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட கட்டணத்துடன் டிஏ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த சமீபத்திய நடவடிக்கையால் சுமார் 14 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைவார்கள்.