அரைக்க வேண்டியவை :
வேர்க்கடலை 100 கிராம்
தேங்காய் துருவல் 1/4 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
பூண்டு 6
காய்ந்த மிளகாய் 6
உப்பு
தாளிக்க வேண்டியவை :
எண்ணெய் , கடுகு , உளுந்து , ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை
செய்யும்முறை : அரைக்க எடுத்துள்ள பொருட்களை அரைக்கவும் , அதே போல கடாயில் போட்டு தாளிக்க எடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான வேர்கடலை சட்னி தயாராகிவிடும்.