Categories
உலகசெய்திகள்

கவிழ்ந்த இம்ரான்கானின் ஆட்சி…. புதிய பிரதமர் யார்…? கட்சியின் “உயர்மட்ட கூட்டத்திற்கு” அழைப்பு….!!

பாகிஸ்தானின் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன் க்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |