ஊழியர்கள் ஷிபிட் நேரத்திற்குப்பின் பணியாற்ற வேண்டாம் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா வார்ட்டன் ஃபியூச்சர் ஆஃப் ஓர்க் என்ற மாநாட்டில் பேசிய போது, தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தொழிலாளர்களின் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் மென்மையான திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வார இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் அதற்கு பதில் அளிக்க தேவையில்லை என சத்ய நாதெள்ளா கூறியிருக்கிறார்.