கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது அதிக அளவு மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அதன்படி 2021 -2022 ஆம் ஆண்டு மொத்தம் 4,29,000 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2020 -2021 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1,34,000 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில் இது 3 மடங்கு அதிகமாகும். மேலும் இருசக்கர மின்சார வாகன விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் முதலிடத்திலும், ஒகினவா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.