பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பயங்கரவாத ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இந்த பக்கமா டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், பணம், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான டேயீஷ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் பெயர்கள் இம்ரான் ஹைதர் மற்றும் ரியாஸ் அகமது ஆகும். இவர்களிடமிருந்து கையெறி குண்டுகள் ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இலக்கியங்கள் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.