பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இம்ரான்கான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளின் சதியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு மக்கள் தான் பொறுப்பு!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.