தமிழகத்தில் வருவாய் எல்லையின்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு சில மாவட்டங்களில், பதிவுமாவட்டங்கள் இல்லை. இதன் காரணமாக பதிவுத்துறை நிர்வாக பணிகளுக்காக மக்கள் அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனையடுத்து ராணிப்பேட்டை, பெரம்பலுார், திருப்பத்துார், திருவள்ளூர், திருவாரூர் போன்ற 5 புதிய பதிவுமாவட்டங்கள் தொடங்க அண்மையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த புதிய பதிவு மாவட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்.11) நடைபெறும் உயர்நிலை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் புதிய மாவட்டங்களுக்கான தொடக்க விழா தேதி முடிவு செய்யப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.