உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பல்வேறு உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் அதிகமான உயிர் இழப்புகளை சந்தித்து புச்சா நகரம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. அங்கு உள்ள சாலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிணக் குவியல்கள் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
அதோடு அந்த நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன . அந்த வரிசையில் அமெரிக்கா, புதினின் மகள்கள் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியின் குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் பொருளாதார தடையை விதித்தது . அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி Lavrov குடும்பத்தினருக்கு பிரிட்டன் பொருளாதார தடையை பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள புடினின் மகள்களான Katerina Tikhonova மற்றும் Maria Vorontsova ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி Lavrov மகள் Yekaterina Vinokurova சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.