ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் முதலியார்விளை பகுதியில் அந்தோணி சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணி சவரிமுத்து ஆடுகளை சென்று பார்த்துள்ளார்.
அப்போது 2 பேர் ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜன் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதன்பிறகு ஆடுகளை மீட்டு உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.