ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள மைரோரோட் விமான தளத்தில் இருக்கும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடங்கியது. ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் ரஷ்யா இந்த தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், உக்ரைன் விமானப்படையின் Mi-8 ரக ஹெலிகாப்டரும், MiG-29 ரக போர் விமானமும் போல்டாவா பிராந்தியத்தில் நடந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் திநிப்ரோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய வெடிமருந்து கிடங்கும் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.