மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியான சாந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.