துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, உ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.