Categories
மாநில செய்திகள்

பார்சல் சேவை கட்டணம் அதிரடி உயர்வு…. தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் நிறுவனங்கள் பார்சல் சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி சேலம் -சென்னை 10 கிலோ பார்சலுக்கு கட்டடம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாகவும், குமரி -சென்னை கட்டணம் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும், நெல்லை -சேலம் கட்டணம் 160 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகளின் டன் கணக்கில் புக்கிங் செய்யும் பொருட்களுக்கு கட்டண உயர்வு இல்லை. குறைந்த அளவில் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |