நாட்டில் மக்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர். அவ்வாறு மக்களுக்கு பலன் தரக்கூடிய முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் ஜன்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டம் இருப்பு தொகை தேவையில்லாத ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திட்டமாகும். இதில் ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் பணமில்லாமல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த திட்டத்தில் வழங்கப்படும் ரூபே கார்டு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் செய்யலாம். இந்தத் திட்டத்தை எந்த வங்கியிலும் தொடங்கலாம். இந்த கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை.
Categories