Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்த ராமநவமி உற்சவ விழா…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

பொள்ளாச்சியில் ராமநவமி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சத்திரம் வீதியில் ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம், ரத உற்சவம் நடைபெற்றது .

இதைத் தொடர்ந்து காலை 9 45 மணி அளவில் தேர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது. இதனை அடுத்து இரவு தேர் நிலை சேர்தல், குதிரை வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ராமச்சந்திர மூர்த்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் இருக்கும் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு மங்கல இசை, ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணம், உபசார பூஜைகள் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீசீதா ராமர் கல்யாண கோலத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். மேலும் இதே போன்று சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரி புத்தூர் காரண வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமியை வழிபட்டு வந்தனர்.

Categories

Tech |