Categories
அரசியல்

திமுகவின் செயல்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக…!!!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஜிகே மணி போன்றோர் கலந்து கொண்டு மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது பாமகதான் இது மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் முதல் குரல் கொடுக்கும் கட்சியாக பாமக செயல்படுகிறது. தமிழகத்தின் வேலைவாய்ப்பு இல்லாததன் காரணமாக பிரச்சனை வருகிறது.

மேலும் தென் மாவட்டங்களில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் உள்ள முக்கிய பிரச்சினை என்பது காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எங்கு தொழிற்சாலை அமைத்தாலும் 80 சதவிகிதம் வேலை வாய்ப்பினை உள்ளூர் மக்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும். திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும்  பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பாக முதல் கையெழுத்து என்பது மதுவிலக்கு என அறிவித்து இருந்தது. தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் முதன் முறையாக அறிவிப்பு வெளியிடவேண்டும். தமிழகத்தின் பார்களை ஆறு மாத காலத்தில் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தீர்ப்பு தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் இதனால் தமிழகத்தில் தற்போது வரை 60 இளைஞர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். பட்டாசு தொழில் பிரச்சினை சிவகாசி பிரச்சினை மட்டும் அல்ல. அது தமிழகத்தின் பிரச்சனை இந்தியாவில் பட்டாசு தேவையைப் பூர்த்தி செய்வது 80 சதவிகித பாடசாலைகள் சிவகாசியில் தான் இருக்கிறது.

பசுமை பட்டாசு குழுவை திருத்தம் கொண்டுவந்து உடனே மத்திய அரசு நீதிமன்றத்தை நாட வேண்டும்.உயர் நீதிமன்ற தீர்ப்பு 10.5% இட ஒதுக்கீட்டு பிரச்சனை தான். ஆனால் அது சாதி பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை. தாழ்ப்பட்ட சமுதாயமும், வன்னியர் சமுதாயமும், ஒரே அளவில் தான் உள்ளது. எனவே வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கிய சமுதாயம் வளரவும் மேலும் உச்சநீதிமன்ற தரப்பிலிருந்து இட ஒதுக்கீடு கண்டிப்பாக வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கலாம் ஆனால் அதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என கூறி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

Categories

Tech |