Categories
தேசிய செய்திகள்

“இந்திக்கு பதிலா இதை செய்யுங்க”….. மத்திய அரசிடம் கூறும் அசாம் மாநிலம்….!!!!

அசாம் மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சம் சாகித்திய இலக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பொது செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாக கூறியுள்ளது. ஆனால் அப்படி செய்தால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்திக்கு பதிலாக உள்ளூர் மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அசாம் உட்பட எட்டு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இந்தியை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமித்ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |