CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்ட பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்தார்.