ட்விட்டர் இறந்து கொண்டிருக்கிறது எனவே அதனை மீட்டெடுக்க ஏதேனும் ஒரு ஆலோசனை கூறுங்கள் என எலன் மாஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். மிக அதிக அளவிலான ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாக டுவிட் செய்வ இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். டெய்லர் ஸ்விஃப்ட் மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 9 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ஆனால் இவர் கடந்த மூன்று மாத காலமாக எந்த பதிவும் போடவில்லை.
இதேபோல் 11 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ள ஜஸ்டின் பைபரும் கடந்த ஒரு வருட காலமாக ஒரே ஒரு ட்வீட்டை தான் பதிவிட்டுள்ளார். வரும் காலங்களில் ட்விட்டரில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவோம் என அவர் உறுதியளித்துள்ளார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் தேவையா என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஆம் என பதிலளித்து உள்ளனர். எனவே விரைவில் அதையும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.